வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சுப்மன் கில்: 6ஆவது அரைசதம் அடித்து அசத்தல்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் தனது 6ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் நடாந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வழக்கம் போல் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாச இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!
ஆனால், ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலி 8 ரன்களிலும், இஷான் கிஷான் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறார். இந்த நிலையில், ஒருபுறம் பவுண்டரியாக விளாசிய சுப்மன் கில் தனது 19 ஆவது இன்னிங்ஸில் 6ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுவும் சிக்ஸ் அடித்து தனது 6ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
திருமணம் நிச்சயமாயிருச்சு, தேதி தான் குறிக்கல: அக்ஷர் படேல் - மேகா திருமணம் எப்போது?
தற்போது வரையில் இந்திய அணி 27.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இதில், சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். சுப்மன் கில் கடந்த 13 ஒரு நாள் போட்டிகளில் வரிசையாக 64, 43, 98 (நாட் அவுட்), 82 (நாட் அவுட்), 33, 130, 3, 28, 49, 50, 45 (நாட் அவுட்), 12 மற்றும் 70 என்று ரன்கள் சேர்த்துள்ளார். மொத்தமாக 707 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு வீச்சில் நடக்கும் திருமண ஏற்பாடுகள்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கே எல் ராகுல் வீடு!