கிளவுஸை வச்சு ஸ்டம்பை அடித்தால் அவுட்டா? டுவிட்டரில் டிரெண்டாகும் ஹர்திக் பாண்டியா நாட் அவுட் ஹேஷ்டேக்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க டுவிட்டரில் ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ரோகித் சர்மா 34, விராட் கோலி 8, இஷான் கிஷான் 5, சூர்யகுமார் யாதவ் 31 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சுப்மன் கில்: 6ஆவது அரைசதம் அடித்து அசத்தல்!
40ஆவது ஓவரை நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் வீசினார். அப்போது 39.4 ஆவது பந்தில் ஹர்திக் பாண்டியா அடிக்காமல் விட்டு விட பந்து கீப்பர் கைக்கு சென்றுவிட அவர் ஸ்டெம்பிற்கு அருகில் வைத்து பிடிக்கவே, கீப்பர் கிளவுஸ் ஸ்டெம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழுந்தது. இதையடுத்து, மூன்றாவது நடுவருக்கு அப்பீல் சென்றது. ஆனால், டிவி ரீப்ளேயில் பந்து கீப்பர் கைக்கு செல்வது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அப்படியிருந்தும் மூன்றாவது நடுவர் ஹர்திக் பாண்டியாவிற்கு அவுட் கொடுத்தார்.
2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!
ஆனால், கிரிக்கெட் பார்த்த அத்தனை ரசிகர்களும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்று ஹேஷ்டேக் உருவாக்கி அதில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு அந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். அப்போது ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷர்துல் தாக்கூர் கொடுத்த வாய்ப்பு: 23 வயசு, 132ஆவது நாளில் இரட்டை சதம் அடித்து சுப்மன் கில் சாதனை!
The star boy of Indian in record books. pic.twitter.com/4pFGFUo3lu