சச்சின் மகள் சாராவிற்கும், சுப்மன் கில்லுக்கும் திருமண நிச்சயதார்த்தமா? டுவிட்டரில் டிரெண்டாகும் சாரா ஹேஷ்டேக்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மகளுக்கும், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்லுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 34, விராட் கோலி 8, இஷான் கிஷான் 5, சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது நடுவரது தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சொந்த மண்ணில் சிராஜ் விளையாடுவதை நேரில் பார்த்து ரசித்த குடும்பத்தினர்!
கிரிக்கெட் பார்த்த ஒவ்வொருவரும் மூன்றாவது நடுவரை விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிசிசிஐயும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டா? இல்லையா? என்று கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இவ்வளவு ஏன், ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மூன்றாவது நடுவரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஒருபுறம் தொடக்க வீரராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 145 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். 2023 ஆம் ஆண்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் படைத்தார். இதற்கு முன்னதாக இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார். 2 ரன்களில் இஷான் கிஷானின் சாதனையை கோட்டை விட்டார். 23 வயதில் 132 நாட்களே ஆன நிலையில், 208 ரன்கள் எடுத்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த நிலையில், டுவிட்டரில் சாரா (Sara) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், பிரேக்கிங் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது மகள் சாராவுக்கும், சுப்மன் கில்லுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், இது போன்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.