ஐக்கிய அரபு நாடுகளை வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி – புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம்!

ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணிக்கு எதிரான மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரின் 5ஆவது போட்டியில் இந்திய மகளிர் அணியானது 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India women won by 78 runs against United Arab Emirates Women in 5th Match of 2024 Womens Asia Cup T20 at Dambulla rsk

இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய மகளிர் அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டி தம்புல்லாவில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு நாடுகள் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது. ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

லைகா கோவையை துவம்சம் பண்ணிய ஷாருக் கான் - திண்டுக்கல் டிராகன்ஸ் 172 ரன்கள் குவிப்பு!

இதில், மந்தனா 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஷஃபாலி வர்மா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தயாளன் ஹேமலதா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில், இருவருமே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 47 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மரண காட்டு காட்டிய ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா மகளிர் அணி 201 ரன்கள் குவிப்பு!

ஆனால், ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா மகளிர் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கவிஷா எகொடகே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சமைரா தர்னிதர்கா மற்றும் ஹீனா ஹாட்சந்தனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணி விளையாடியது. இதில் தொடக்க வீராங்கனை தீர்த்த சதீஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒலிம்பிக்கில் தடகளத்தில் சாதிக்க காத்திருக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் யார் யார் தெரியுமா?

ரினிதா ரஜிதா 7 ரன்னிலும், சமைரா தர்னிதர்கா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஈஷா ரோஹித் ஓசா 38 ரன்களில் வெளியேறவே, பின்வரிசை வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை விளையாடிய கவிஷா எகொடகே 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இறுதியாக ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய மகளிர் அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்ப்ர 1 இடத்தில் உள்ளது.

இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி இந்தியா மகளிர் அணியானது நேபாள் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios