மரண காட்டு காட்டிய ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா மகளிர் அணி 201 ரன்கள் குவிப்பு!
ஐக்கிய அரபு நாடுகளுக்கு எதிரான மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரின் 5ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய மகளிர் அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போடி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு நாடுகள் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது. ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், மந்தனா 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஷஃபாலி வர்மா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒலிம்பிக்கில் தடகளத்தில் சாதிக்க காத்திருக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் யார் யார் தெரியுமா?
தயாளன் ஹேமலதா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில், இருவருமே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 47 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா மகளிர் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கவிஷா எகொடகே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சமைரா தர்னிதர்கா மற்றும் ஹீனா ஹாட்சந்தனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணி விளையாடி வருகிறது.