ஒலிம்பிக்கில் தடகளத்தில் சாதிக்க காத்திருக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் யார் யார் தெரியுமா?
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தடகளத்தில் ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் உள்பட பல தமிழக வீரர், வீராங்கனைகள் சாதிக்க காத்திருக்கின்றனர்.
ஒட்டு மொத்த உலகமே ஆவலுடன் காத்திருக்கும் 33ஆவது ஒலிம்பிக் தொடர் பாரிஸில் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
இந்தியா:
இந்தியா சார்பில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட 117 பேர் இடம் பெற்று 16 விளையாட்டுகளில் விளையாடுகின்றனர். இதில் தடகளப் போட்டியில் மட்டும் 18 வீரர்கள், 11 வீராங்கனைகள் உள்பட 29 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
ஈட்டி எறிதல்:
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வீரர், வீராங்கனைகள் (13):
பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்ற 18 வீரர்கள், 11 வீராங்கனைகளில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ் தமிழரசன், சுபா வெங்கடேசன் (திருச்சி), வித்யா ராமராஜ் (கோயம்புத்தூர்), பிரவீன் சித்திரவேல் ஆகிய தமிழக வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 வீரர்களும், ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்ற நிலையில் மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் தகுதி பெறவில்லை. இந்த தொடருக்கு தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட 117 விளையாட்டு வீரர்களில், 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் முதல் முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கின்றனர்.
முதல் முறையாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு 29 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கி சுடுதலில் 21 வீரர், வீராங்கனைகளும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் 19 வீரர்கள், டேபிள் டென்னிஸ் 8, பேட்மிண்டன் 7 (4 ஆண்கள், 3 பெண்கள்), மல்யுத்தம் 6, வில்வித்தை 6, குத்துச்சண்டை 6, கோல்ஃப் 4, டென்னிஸ் 3, நீச்சல் 2, படகுபோட்டி 2, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் தலா ஒரு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மாநிலம் வாரியாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர், வீர்ரகள்:
பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டு வீரர்களை களமிக்கும் மாநிலமாக ஹரியானா (24) திகழ்கிறது. பஞ்சாப் (19), தமிழ்நாடு (13), கர்நாடகா (7), உத்திரபிரதேசம் (7), கேரளா (6), மகாராஷ்டிரா (5), டெல்லி (4), ஆந்திரபிரதேசம் (4), தெலங்கானா (4), உத்தரகாண்ட் (4), மேற்கு வங்காளம் (3), மத்தியபிரதேசம் (2), மணிப்பூர் (2), ஒரிசா (2), ராஜஸ்தான் (2), குஜராத் (2), சண்டிகர் (2), பீகார் (1), அசாம் (1), சிக்கிம் (1), ஜார்க்கண்ட் (1), கோவா (1).
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒன்றுக்கும் அதிகமான போட்டிகளில் பருல் சவுத்ரி மற்று மனு பாக்கர் மட்டுமே பங்கேற்கின்றனர். மகளிருக்கான 5000 மீட்டர் தடகளப் போட்டி (ரன்னிங்) மற்றும் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டிகளில் பாருல் சவுத்ரி பங்கேற்கிறார். இதே போன்று மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல், 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக் - தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரே ஒரு தங்கமகன் நீரஜ் சோப்ரா தான்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இளம் இந்திய தடகள வீராங்கனை:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் 14 வயது நிரம்பிய நீச்சல் வீராங்கனை திநிதி தேசிங்கு ஆவார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் அதிக வயதான இந்திய வீரர்கள்:
அதிக வயதில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர் ரோகன் போபண்ணா (44). இவரைத் தொடர்ந்து டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் (42) அதிக வயதானவர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.
- 2024 Paris Games
- Break Dancing
- India at the 2024 Summer Olympics
- Indian weightlifter
- Mirabai Chanu
- Neeraj Chopra
- Olympic Games Paris 2024
- Olympic Schedule
- Olympic Sports Breaking
- Olympics
- Olympics 2024 opening ceremony
- Olympics 2024 schedule
- Olympics Sports
- PV Sindhu
- Paris 2024
- Paris 2024 Olympics
- Paris Olympic Venues
- Paris Olympics 2024
- Paris Olympics 2024 Closing Ceremony
- Paris Olympics 2024 Opening Ceremony
- Summer Olympics 2024
- Weightlifting