லைகா கோவையை துவம்சம் பண்ணிய ஷாருக் கான் - திண்டுக்கல் டிராகன்ஸ் 172 ரன்கள் குவிப்பு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் 19ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணியானது ஷாருக் கானின் அதிரடியால் 172 ரன்கள் குவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடைபெறுகிறது, இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின்படி லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
மரண காட்டு காட்டிய ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா மகளிர் அணி 201 ரன்கள் குவிப்பு!
சேலம் ஸ்பார்டன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது திருநெல்வேலியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சாய் சுதர்சன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி 33 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். முகிலேஷ் 5 ரன்களில் வெளியேற, ராம் அரவிந்த் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒலிம்பிக்கில் தடகளத்தில் சாதிக்க காத்திருக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் யார் யார் தெரியுமா?
கடைசியில் ஷாருக் கான் மற்றும் ஆதிக் உர் ரஹ்மான் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கவே லைகா கோவை கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதில் ஷாருக் கான் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆதிக் ரஹ்மான் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.