India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டியானது முற்றிலும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முல்தானில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
World Cup 2023 Tcikets: இந்தியா மோதும் உலகக் கோப்பை 2023 போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்!
இதையடுத்து தற்போது இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய வங்கதேச அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் 3ஆவது லீக் போட்டியானது வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மோதின. இதில், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று இலங்கை வந்தனர். இன்று பாகிஸ்தான் வீரர்கள், இலங்கை வந்துள்ளனர். ஏற்கனவே நேபாள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 342 ரன்கள் குவித்து வலிமையான அணியாக திகழும் பாகிஸ்தான், பந்து வீச்சிலும் பக்கா அணியாக வலம் வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி விட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஓய்வில் இருந்துவிட்டு இந்திய அணி வீரர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஒரு போட்டிக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
ஆனால், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நாளை முதல் நாளை மறுநாள் வரையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் உருவாகியுள்ள பலகொல்ல புயலானது கண்டியை கடக்க உள்ள நிலையில் மழை பாதிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இப்படியொரு செய்தியானது அவர்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வானிலை அலுவலகத்தின் கூற்றுப்படி, கண்டியில் IND vs PAK போட்டியின் போது மழைக்கான வாய்ப்பு 70% ஆகும். பிற்பகல் 2:30 மணிக்கு (போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 5:30 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு 60% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வானிலை ஆய்வு மையமானது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. கண்டி மத்திய மாகாணத்தின் கீழ் வருகிறது. ஆகையால், நாளை வெள்ளி மற்றும் நாளை மறுநாள் சனிக்கிழமைகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.