பிசிசிஐ மீடியா உரிமையை கைப்பற்றிய வையாகாம் 18; ஒரு போட்டிக்கு ரூ.67.8 கோடி வீதம் ரூ.5,996.4 கோடி கொடுத்துள்ளது
பிசிசிஐ மீடியா உரிமையை வையாகாம் 18 நிறுவனம் ரூ.5,996.4 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான பிசிசிஐ மீடியா உரிமையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வையாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. Viacom 18 தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான ஊடக உரிமைகளை வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு ரூ. 67.8 கோடி வீதம் அடுத்து 5 ஆண்டுகளில் நடக்கும் 88 போட்டிகளுக்கு மொத்தமாக ரூ.5,996.4 கோடி பிசிசிஐக்கு கொடுத்த மீடியா உரிமையை கைப்பற்றியுள்ளது.
BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது கடைசியாக மீடியா உரிமைக்கான 2023 முதல் 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டரை நிர்ணயித்துள்ளது. இந்த டெண்டரானது கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெளியானது. இதனை, இந்திய வாரியத்தின் பங்குதாரரான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்டது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக IND vs AUS ODI தொடருக்கான புதிய ஒளிபரப்பு உரிமைகளின் டெண்டர் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது.
ஆசிய கோப்பை 2ஆவது லீக் போட்டியில் இலங்கை – வங்கதேசம் பலப்பரீட்சை: கலே யாருக்கு சாதகம்?
இதையடுத்து புதிய டெண்டருக்கான ஒப்பந்தமானது அடுத்து 5 ஆண்டு காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனமானது வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இரு தரப்பு போட்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெறும்.
இந்த டெண்டருக்கான ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்), வையாகாம் 18 (ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா), சோனி (சோனி 10, சோனி லைவ்) ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுள்ளன. இந்த நிறுவங்கள் தவிர ஜீ மற்றும் ஃபேன் கோடு ஆகியவை டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான போட்டியில் இந்த நிறுவனங்களுடன் இணைந்து 5 ஆண்டுகாலத்திற்கு போட்டி போடுகின்றன.
Viacom ஆனது டிஜிட்டல் ரீதியில் நிறைய சலுகைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் போட்டிகளை டிவியில் குறைவாகவே கொண்டுள்ளது. இதன் மூலமாக பார்வையாளர்களை அதிகரிக்க குறைந்தபட்சம் டிவி உரிமையையாவது பெற வையாகாம் தீவிரமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பிசிசிஐ மீடியா உரிமையை வையாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனமானது ஐபிஎல் (டிஜிட்டல்), மகளிர் ஐபிஎல், ஒலிம்பிக்ஸ் 2024, எஸ்.ஏ. உள்ளூர் போட்டிகள் 2024, டி10 லீக், ரோடு சேஃப்டி உலக தொடர், எஸ்.ஏ.20, என்பிஏ, டைமண்ட் லீக் என்று ஏராளமான தொடர்களை இந்த நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது.
வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் 25 டெஸ்ட், 27 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகள் என்று மொத்தமாக 88 சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தியாவில் விளையாடப்படும் இரு தரப்பு தொடர்களை எல்லாம், வையாகாம் 18 நிறுவனம் ஸ்போர்ட்ஸ் 18ல் ஒளிபரப்பு செய்வதோடு, ஜியோ சினிமாவிலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்கிறது.
இன்று நடந்த இ-ஏலத்தின் போது டிஸ்னி பிளஸ் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் கடும் போட்டியாக இருந்துள்ளன. இதனை வையாகாம் 18 நிறுவனம் தடுத்து மீடியா உரிமையை கைப்பற்றியுள்ளது. இது குறித்து சோனி பிக்ஸர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான என்பி சிங், இரு தரப்பு மீடியா உரிமைகளுக்கான இ ஏலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், “வெளிப்படையான மற்றும் திறமையான இ-ஏல செயல்முறைக்காக பிசிசிஐ-க்கும், இருதரப்பு ஊடக உரிமைகளைப் பெற்ற வெற்றியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏலமானது சந்தை முன்னறிவிப்புகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சி மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு விளையாட்டு வகைகளில் தொடர்ந்து உற்சாகம் அதிகரித்து வருவதால், உயர்மட்ட விளையாட்டு பொழுதுபோக்குகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்று கூறினார்.
செப்டம்பர் 2023 முதல் மார்ச் 2028 வரை ஒளிபரப்பு சுழற்சியில் சுமார் 88 சர்வதேச போட்டிகள் இருக்கும். இந்த சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கையானது 102 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் சர்வதேச இருதரப்பு போட்டிகளுக்கான டிவி மற்றும் டிஜிட்டல் மீடியா உரிமைகளையும், இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான டிஜிட்டல் மீடியா உரிமைகளையும், மகளிர் பிரீமியர் லீக்கின் டிவி மற்றும் டிஜிட்டல் மீடியா உரிமைகளையும் இப்போது Viacom 18 பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெற்றி பெற்ற வையாகாம்18 நிறுவனத்தின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து கூறியுள்ளார்.