ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி இலங்கை வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்தும் ஆசிய கோப்பை 16ஆவது எடிஷன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான், நேபாள் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் எடுத்தனர்.

Pakistan vs Nepal: பவுலிங்கில் பட்டைய கிளப்பிய பாகிஸ்தான்; ஷதாப் கான் 4 விக்கெட், ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்!

நேபாள்:

ரோகித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), குஷால் மல்லா, ஆரிஃப் ஷேக், தீபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி.

பாகிஸ்தான்:

ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஷரீஷ் ராஃப்

IND vs PAK, World Cup 2023 Ticket:சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்; புக்மை ஷோவை விமர்சித்த ரசிகர்கள்

பின்னர், கடின இலக்கை துரத்திய நேபாள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட் கைப்பற்றினார். குஷால் புர்டெல் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் பவுடல் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக், நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆரிஃப் ஷேக் மற்றும் சோம்பால் கமி ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த வீரர்கள் ஷதாப் கான் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே நேபாள் அணி 23.4 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Asia Cup 2023: விளையாடுவதற்கு முன்னரே இலங்கையில் சீன் போட்ட இந்திய வீரர்கள்!

பந்து வீச்சு தரப்பில் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரீஷ் ராஃப் 2 விகெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஷதாப் கான் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது.

Scroll to load tweet…

இதற்காக இந்திய வீரர்கள் நேற்று இலங்கை வந்தனர். இந்த நிலையில், நேபாள் அணியை வீழ்த்திய கையோடு இன்று பாகிஸ்தான் வீரர்கள் கொழும்புவிற்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Asia Cup 2023, Pakistan vs Nepal 1st Match: புதிய சாதனை படைத்த பாகிஸ்தான்; ஒரு கேப்டனாக சாதித்த பாபர் அசாம்!