IND vs PAK, World Cup 2023 Ticket:சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்; புக்மை ஷோவை விமர்சித்த ரசிகர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஆத்திரமடைந்த ரசிகர்கள் புக்மைஷோவை மோசமான சேவைக்காக குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கு நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Asia Cup 2023: விளையாடுவதற்கு முன்னரே இலங்கையில் சீன் போட்ட இந்திய வீரர்கள்!
இந்தியா தனது 3ஆவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையானது புக்மை ஷோ இணையதளத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டிக்கெட் விற்பனையானது சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.
கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், மோசமான சேவைக்காக சமூக வலைதளங்களில் டிக்கெட் பார்ட்னரான புக்மை ஷோவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வெறும் 5 நிமிட காத்திருப்பில், ரசிகர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர் மற்றும் 6 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்குமாறு பிஎம்எஸ் வலைத்தளம் கேட்டுக் கொண்டது. டிக்கெட் புக் செய்யும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் மீண்டும், டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதால், வாய்ப்பு கிடைத்தவர்கள் விரைவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.