Asia Cup 2023: விளையாடுவதற்கு முன்னரே இலங்கையில் சீன் போட்ட இந்திய வீரர்கள்!
ஆசிய கோப்பை 2023 தொடருக்காக இந்திய வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட கையோடு இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை 2023 தொடருக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒன்று கூடினர். அங்கு வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பயிற்சி போட்டியும் நடத்தப்பட்டது.
இதில், யார் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, போட்டி நடக்கும் போது வீரர்களின் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது 30ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. ஆசிய கோப்பை தொடக்க விழாவில் பாகிஸ்தானை சேர்ந்த ஐமா பேக் மற்றும் நேபாளைச் சேந்த திரிஷாலா குரூங் ஆகியோரது இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தற்போது நடந்து வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் விளையாடி வருகின்றன. நாளை 31 ஆம் தேதி நடக்கும் 2ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது, பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியானது செப்டம்பர் 2ஆம் தேதி பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது.
Paksitan vs Nepal: தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்ட முகமது ரிஸ்வான்; விரக்தியடைந்த பாபர் அசாம்!
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். விளையாடுவதற்கு முன்னரே, இந்திய வீரர்கள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்வது என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இப்போதே சீன் போட ஆரம்பித்துவிட்டனர். ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெற மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது. அவர் சூப்பர் 4 சுற்றில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.