Paksitan vs Nepal: தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்ட முகமது ரிஸ்வான்; விரக்தியடைந்த பாபர் அசாம்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் முகமது ரிஸ்வான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது, கேப்டன் பாபர் அசாமை விரக்தியடையச் செய்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி ஃபஹர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் பாகிஸ்தான் அணியின் ரன் கணக்கை தொடங்கினர். இதில், முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜமான் பவுண்டரி அடித்தார்.
Nepal vs Paskitan: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் நேபாள்!
எனினும், அவர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். நேபாள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கரண் கேசி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று மற்றொரு தொடக்க வீரர் இமாம் ரன் அவுட் முறையில் 5 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அப்போது, முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 24ஆவது ஓவரை சந்தீப் லமிச்சனே வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ரிஸ்வான் கவர் பாய்ண்ட் திசையில் பந்தை திருப்பி விட்டு ஓட முயன்றார், ஆனால், அங்கு பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த திபேந்திர சிங் பந்தை பிடித்து சரியான முறையில் ஸ்டெம்பை நோக்கி எறிய, பந்தானது ஸ்டெம்பில் படவே ரன் அவுட் முறையில் ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரிஸ்வான் ஆட்டமிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத பாபர் அசாம், தனது கேப்பை தூக்கி எறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வரையில் பாகிஸ்தான் 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், பாபர் அசாம் 95 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.