Asia Cup Opening Ceremony: ஐமா பேக், திரிஷாலா குருங் இசை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக தொடங்கிய ஆசிய கோப்பை 2023!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சியானது பாகிஸ்தானை சேர்ந்த ஐமா பேக் மற்றும் நேபாளைச் சேர்ந்த திரிஷாலா குரூங் ஆகியோரது இசை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக தொடங்கியது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடத்தும் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஐமா பேக் மற்றும் நேபாளைச் சேர்ந்த திரிஷாலா குரூங் ஆகியோரது இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நடந்த டாஸ் நிகழ்ச்சியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் பேட்டிங் விளையாடி வருகிறது. தற்போது வரையில் 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Asia Cup 2023: 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 இன்று தொடக்கம்!
நேபாள்:
ரோகித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), குஷால் மல்லா, ஆரிஃப் ஷேக், தீபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி.
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஷரீஷ் ராஃப்
ஆசிய கோப்பை 2023 முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாள் பலப்பரீட்சை!
இதுவரையில் நடந்த 15 சீசன்களில் பாகிஸ்தான் 2 முறை மட்டுமே ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது. ஆனால், 3 முறை 2ஆவது இடம் பிடித்துள்ளது. தற்போது 2ஆவது முறையாக ஆசிய கோப்பை தொடரை நடத்துகிறது. முதல் முறையாக இந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் நேபாள் அணி விளையாடுகிறது.