Asia Cup 2023: 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 இன்று தொடக்கம்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்தும் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

Asia Cup 2023 for the 16th edition starts today rsk

ஆசிய கோப்பை என்பது ஆசியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மூலம் ஆசிய கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில், இந்தியா வெற்றி பெற்றது.

R Praggnanandhaa: சென்னை வந்த பிரக்ஞானந்தாவிற்கு மேள தாளத்துடன் வரவேற்பு; திருவிழா கோலமான விமான நிலையம்!

கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் நடந்த 15 சீசன்களில் முறையே இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளன. இதில், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் 2ஆவது இடத்திற்கு பல முறை வந்துள்ளன. ஆனால், ஒரு முறை கூட வங்கதேச அணி ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியதில்லை.

ஆசிய கோப்பை 2023 முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாள் பலப்பரீட்சை!

இந்த நிலையில், 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசன், நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

சிக்கலில் இலங்கை அணி: வணிந்து ஹசரங்கா உள்ளிட்ட வீரர்கள் காயம்; ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளும் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதாவது, குரூப் ஏ பிரிவில் உள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளில் இந்திய அணியானது பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுடன் ஒரு முறை மோதும். இதே போன்று பாகிஸ்தானது நேபாள் மற்றும் இந்தியாவுடன் மோதும். மேலும், நேபாளம் அணியானது மற்ற 2 அணிகளுடன் போதும்.

இதில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணியானது சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில், கடைசியாக 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. பாகிஸ்தானில் முல்தான், லாகூரிலும் இலங்கையில் கொழும்பு மற்றும் பல்லேகலேயிலும் இந்த ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது.

இன்று தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

IND vs PAK போட்டிக்கு 10 வினாடிக்கு ரூ.30 லட்சம், ஆசிய கோப்பைக்கு ரூ.400 கோடி, வருமானம் ஈட்டும் டிஸ்னி ஸ்டார்!

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆசிய கோப்பை 2023 தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அதிஃப் அஸ்லாம் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கிடையில், பாரம்பரிய ஆசிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும், அதைத் தொடர்ந்து வானவேடிக்கை காட்சியும் நடைபெறும்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.

நேபாள்:

ரோகித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, பிரதீஷ் ஜிசி., மௌசம் தாகல், சந்தீப் ஜோரா, கிஷோர் மஹதோ, அர்ஜுன் சவுத் (விக்கெட் கீப்பர்), ஆசிப் ஷேக், பீம் ஷர்கி, குஷால் மல்லா, ஆரிஃப் ஷேக், தீபேந்திர சிங் ஐரி (விசி), குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி.

பாகிஸ்தான்:

பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷாஃபீக், ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அகா, இப்திகார் அகமது, முகமது இஸ்வான், முகமது ஹரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், பாஹீம் அஷ்ரஃப், ஹரீஷ் ராஃப், முகமது வாசீம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, சவுத் ஷகீல், தயப் தாஹீர்

இலங்கை:

தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ் (துணை கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரமா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லலகே, மத்தீஷா பதிரனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, தசுன் ஹேமந்த், பிரமோத் மதுஷன், ஃபினுரா ஃபெர்னாண்டோ

வங்கதேசம்:

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நஸும் அகமது, ஷக் மஹெதி ஹசன், நைம் ஷேக், ஷமீம் ஹூசைன், தன்சிம் ஹசன் ஷாகீப், அனாமுல் ஹக் பிஜோய், தன்சித் ஹசன் தமீம்

ஆப்கானிஸ்தான்:

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ரியாஸ் ஹாசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ராம் அலி கில், ரஷீத் கான், குல்பதின் நைப், கரீம் ஜனத், அப்துல் ரஹ்மான், ஷரபுதீன் அஷ்ரஃப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் பாரூக்கி, முகமது சலீம்,

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios