BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தும் 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அதிகபட்சமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை 2ஆவது லீக் போட்டியில் இலங்கை – வங்கதேசம் பலப்பரீட்சை: கலே யாருக்கு சாதகம்?
வங்கதேசம்:
முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிஜுர் ரஹ்மான்,
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, மத்தீஷா பதிரனா
இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரின் 2ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. பல்லேகலே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகீப் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இலங்கை அணியைப் பொறுத்த வரையில் 6 பேட்டர்கள், 2 ஆல் ரவுண்டர்கள் மற்றும் 3 பவுலர்களுடன் களமிறங்கிறது. இலங்கை அணியில் மத்தீஷா பதிரனா மற்றும் துனித் வெல்லலகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று வங்கதேச அணியில் தன்சித் ஹசன் தமீம் இன்றைய போட்டியின் மூலமாக அறிமுகமாகிறார். இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 51 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டிகளில் முடிவு எட்டப்படவிலை.
ஹோம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் 18ல் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது. 6 போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதுவே வெளி மைதானத்தில் நடந்த போட்டிகளில் 14ல் இலங்கையும், 2ல் வங்கதேச அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை சீசன்களில் இலங்கை அணி கடந்த சீசன் உள்பட 6 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அதோடு 6 முறை ரன்னராகவும் வந்துள்ளது.
இதுவே வங்கதேச அணியானது ஒரு முறை கூட ஆசிய கோப்பையை கைப்பற்றவே இல்லை. ஆனால், 3 முறை 2ஆம் இடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணியின் துணை கேப்டனான லிட்டன் தாஸ் காய்ச்சல் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று இலங்கை அணியில், சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம் பெறவில்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த் சமீரா, லஹிரு மதுஷங்கா, லஹிரு குமாரா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.