Asia Cup 2023: தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹூசைன் சாண்டோ; 4 விக்கெட் கைப்பற்றி அசத்திய மத்தீஷா பதிரனா!
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தும் 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அதிகபட்சமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம்:
முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிஜுர் ரஹ்மான்,
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, மத்தீஷா பதிரனா
BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
இதையடுத்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது லீக் போட்டியானது தற்போது இலங்கையிலுள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் மற்றும் தன்சித் ஹசன் இருவரும் வங்கதேச ரன் கணக்கை தொடங்கினர்.
எனினும், தனது முதல் போட்டியில் விளையாடிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் 2ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் முகமது நைம் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஷாகில் அல் ஹசன் 5 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
ஆசிய கோப்பை 2ஆவது லீக் போட்டியில் இலங்கை – வங்கதேசம் பலப்பரீட்சை: கலே யாருக்கு சாதகம்?
இதையடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் சாண்டோ நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, வங்கதேச அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் மத்தீஷா பதிரனா 7.4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மஹீத் தீக்ஷனா 8 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே மற்றும் தசுன் ஷனாகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இரு அணிகளும் விளையாடி வரும் பல்லேகலே மைதானத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.