Asianet News TamilAsianet News Tamil

இந்தூர் ரெக்கார்டு சொல்லும் புதிய ஸ்டேட்டிஸ்டிக்ஸ்: சேவாக் 219 அடிச்சது இங்க தான்; நியூ.,க்கு ஆப்பு ரெடி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 115 போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

India have won 5 ODI record in Indore Holkar Stadium
Author
First Published Jan 24, 2023, 9:46 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராய்ப்பூரில் நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய பௌலர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதிலேயும் முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதன் மூலம் நியூசிலாந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதியா ஷெட்டி திருமணத்திற்கு வந்த மீடியா நண்பர்களுக்கு இனிப்பு வழங்கிய சுனில் ஷெட்டி மற்றும் ஆஹான் ஷெட்டி!

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 11 ரன்னில் வெளியேற சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக இந்தியா 20.1 ஓவர்களின் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. அதுமட்டுமின்றி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

மாஸாக நடந்த கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சியிக்கு யாரெல்லாம் வந்திருந்து வாழ்த்தினார்கள் தெரியுமா?

இதையடுத்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. அதுவும், இந்தூரில் 50 ஓவர்கள் போட்டி நடந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்படியிருக்கும் போது இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!

இதுவரையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 115 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் இந்தியா 57 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. நியூசிலாந்து 50 போட்டிகளீல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ள நிலையில், 7 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

இந்தியாவில் மட்டும் நடந்த 38 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 28 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 8 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இந்தியா இதுவரையில் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.

ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரில் நடந்தது. இதில், இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் விரேந்திர சேவாக் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். அதுவும் 149 பந்துகளில் 7 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் உள்பட 219 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் மட்டுமே எடுத்து 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தூரில் நடந்த 5 ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், முதலில் பௌலிங் (சேஸிங் செய்த அணி) செய்த அணி 2 முறையும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி அணியின் ஆவரேஜ் ஸ்கோர் 308 ஆகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios