Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பை: ஜடேஜா - ஹர்திக் பாண்டியா பொறுப்பான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

india beat pakistan by 5 wickets in asia cup 2022
Author
First Published Aug 28, 2022, 11:50 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட்கீப்பர்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஷாநவாஸ் தஹானி.

இதையும் படிங்க - IND vs PAK: அவரை ஆடும் லெவனில் எடுத்தது பெரிய சர்ப்ரைஸ் தான்..! ஆனால் நீடிக்கமாட்டார்.. கௌதம் கம்பீர் அதிரடி

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியை தொடக்கம் முதலே எளிதாக ரன் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர் இந்திய பவுலர்கள். அதன்விளைவாக சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன. 3வது ஓவரிலேயே பாகிஸ்தான் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாமை 10 ரன்களுக்கு வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.

அதனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும் என்பதற்காக நிதானமாக ஆடினார். புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான், ஜடேஜா அனைவருமே கட்டுக்கோப்புடன் வீசியதால் வேகமாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய முகமது ரிஸ்வான் 43 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குஷ்தில் ஷாவும் (2) ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஷதாப் கான்(10), ஆசிஃப் ஆலி(9), நசீம் ஷா(0) ஆகிய மூவரையும் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடைசியில் ஷாநவாஸ் தஹானி, 6 பந்தில் 2சிக்ஸர்களுடன் 16 ரன்கள் அடிக்க, 19.5 ஓவரில் 147 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் முதல் ஓவரின் 2வது பந்தில், ரன்னே அடிக்காமல் நசீம் ஷாவின் பவுலிங்கில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் சர்மா 18 பந்தில் 12 ரன்கள் மட்டுமே அடித்து முகமது நவாஸின்பந்தில் ஆட்டமிழக்க, நிதானமாக சிறப்பாக ஆடிய  விராட் கோலி 35 ரன்களுக்கு நவாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையும் படிங்க - 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

சூர்யகுமார் யாதவும் 18 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளிக்க, அதிரடியாக பேட்டிங் ஆடிய ஜடேஜா 29 பந்தில் 35  ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகளை விளாச, இந்திய அணிக்கு கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து இந்திய அணி 5  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios