IND vs PAK: அவரை ஆடும் லெவனில் எடுத்தது பெரிய சர்ப்ரைஸ் தான்..! ஆனால் நீடிக்கமாட்டார்.. கௌதம் கம்பீர் அதிரடி

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்டை ஆடவைக்காமல் தினேஷ் கார்த்திக்கை ஆடவைத்தது பெரிய சர்ப்ரைஸ் தான் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

gautam gambhir surprises on dinesh karthik selection in team india playing eleven ahead of rishabh pant against pakistan clash in asia cup 2022

ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம் இருந்தது. எனவே ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர் தான் அணியில் எடுக்கப்படுவார்; தினேஷ் கார்த்திக் உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க - Asia Cup: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கருப்பு பட்டை அணிந்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள்..! இதுதான் காரணம்

ஆனால் அண்மையில் ஃபினிஷர் ரோலை மிகச்சிறப்பாக செய்து அணி நிர்வாகத்தின் அபிப்ராயத்தை பெற்ற தினேஷ் கார்த்திக் மீது நம்பிக்கை வைத்து அவரை விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக எடுத்துள்ளது இந்திய அணி. எனவே ரிஷப் பண்ட் உட்காரவைக்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

ரிஷப் பண்ட்டை எடுக்காமல் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது கண்டிப்பாகவே பெரிய சர்ப்ரைஸ் தான். இப்போது வர்ணனையாளர்களாக இருக்கும் முன்னாள் வீரர்கள் பலருக்குமே இது பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

இதையும் படிங்க - Asia Cup: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கருப்பு பட்டை அணிந்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள்..! இதுதான் காரணம்

அதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், டி20 உலக கோப்பைக்கு முன் இன்னும் எத்தனை போட்டிகள் உள்ளன..? ஆசிய கோப்பை முடிந்தபின் வெறும் 6 போட்டிகள் மட்டுமே உள்ளன. எனவே பரிசோதனைகளை இன்னும் செய்வது சரியல்ல. இந்நேரம் டி20 உலக கோப்பைக்கான ஆடும் லெவனை உறுதி செய்திருக்க வேண்டும். ரிஷப் பண்ட் அபாரமான வீரர். தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது பெரிய சர்ப்ரைஸ் தான். ஆனால் இது நீடிக்கும் என நான் நினைக்கவில்லை என்று கம்பீர் கூறியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios