6 வருடங்களுக்கு பிறகு டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் 4 வீரர்கள் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
பறவை போல பறந்த ஸ்டீவ் ஸ்மித் - ஹர்திக் பாண்டியாவை கெட்ச் போட்டு தூக்கிய ஆஸ்திரேலியா!
இந்தியா:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ச்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சீன் அபாட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார், ஆடம் ஜம்பா.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணியில், முதலில் களமிறங்கிய சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, 13 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். இவருக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால், இவர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கேஎல் ராகுல் (9), ஹர்திக் பாண்டியா (1), விராட் கோலி (31), ரவீந்திர ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (0), முகமது சிராஜ் (0) என்று வரிசையாக ஆட்டமிழக்க இந்தியா 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இதற்கு முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 4 பேர் டக் அவுட்டில் வெளியேறியுள்ளனர்.
1995 - இந்தியா - பாகிஸ்தான் - ஷார்ஜா
1997 - இந்தியா - பாகிஸ்தான் - ஹைதராபாத்
2009 - இந்தியா - ஆஸ்திரேலியா - கவுகாத்தி
2011 - இந்தியா - தென் ஆப்பிரிக்கா - நாக்பூர்
2017 - இந்தியா - இலங்கை - தர்மசாலா
2023 - இந்தியா - ஆஸ்திரேலியா - விசாகப்பட்டினம்
இதன் முலமாக 6 ஆண்டுகளுக்கு எதிராக இந்திய வீரர்களில் 4 பேர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். அதுமட்டுமின்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன்கள்....
1981 சிட்னி - 63 ரன்கள்
2000 சிட்னி - 100 ரன்கள்
2023 விசாகப்பட்டினம் - 117 ரன்கள்
2003 செஞ்சூரியன் - 125 ரன்கள்
1992 மெல்போர்ன் - 145 ரன்கள்
கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!
இந்தியாவில் இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன்கள்:
1986 - இந்தியா - இலங்கை - 78 ரன்கள்
1993 - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - 100 ரன்கள்
2017 - இந்தியா - இலங்கை - 112 ரன்கள்
2023 - இந்தியா - ஆஸ்திரேலியா - 117 ரன்கள்
1987 - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - 135 ரன்கள்