IND vs PAK Match: ஸ்டார் ஹோட்டல்களில் 2 இரவுக்கு ரூ.3,50,000 வாடகையா?
உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ஸ்டார் ஹோட்டல்களில் 2 இரவுக்கு மட்டும் ரூ.3.50,000 வரையில் வாடகையான வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பைத் தொடரைத் தொடர்ந்து ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் போட்டியானது அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், தர்மசாலா, டெல்லி என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது.
Asia Cup 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பைக்கான புரோமோ வீடியோ வெளியீடு!
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி விழா என்பதால், அன்று நடக்க இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.
Virat Kohli Gym Work Out Video: வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் விராட் கோலி – வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளின் போது ஸ்டார் ஹோட்டல்களில் 2 இரவுக்கு ரூ.3,50,000 வரையில் வாடகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர சாதாரண ஹோட்டல்களில் ஒரு இரவுக்கு ரூ.4000 வீதம் வாடகையானது வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.60,000 வரையில் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
World Cup 2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு தொடங்கியது: டிக்கெட் வெளியீடு, அறிவிப்பு வரும்!
வரும் 25 ஆம் தேதி முதல் உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அதன்படி, ஐசிசி இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், இ-மெயில், மொபைல் போன், பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட முகமது ஷமி: சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்!
அப்படி பதிவு செய்வதன் மூலமாக, ஐசிசி டிக்கெட் விற்பனை தொடங்கியதும், முதலில் உங்களுக்கு டிக்கெட் விற்பனை, பரிசு தொகை, அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதோடு, நீங்கள் எந்த போட்டிக்கான டிக்கெட் பெற விரும்புகிறீர்களோ அதனை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது, வரிசையாக 10 அணிகளும், 10 மைதானங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் விரும்பும் போட்டி மற்றும் அணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.