10:56 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test பரபரப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட்! கடைசி நாளில் இந்தியா வெற்றி பெறுமா?

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Read Full Story
09:52 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து சாதனை படைத்த தமிழக வீரர்! வாஷிங்டன் சுந்தர் அசத்தல் பவுலிங்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார்.

Read Full Story
09:23 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test இங்கிலாந்து 192 ரன்னில் சுருண்டது! இந்தியா வெற்றி பெற 193 ரன்கள் தேவை!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் தனது 2வது இன்னிங்ஸ் விளையாடும் இங்கிலாந்து அணி வெறும் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் டக்கெட் (12 ரன்), ஆலி போப் (4), சாக் க்ரொலி (22), ஹாரி ப்ரூக் (23), ஜேமி ஸ்மித் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 40 ரன்னில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸும் (33) ஜொலிக்கவில்லை. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

08:17 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test விக்கெட்டுகளை இழந்து போராடும் இங்கிலாந்து! இந்தியா வலுவான நிலை!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் தனது 2வது இன்னிங்ஸ் விளையாடும் இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளை வரை 175 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பென் டக்கெட் (12 ரன்), ஆலி போப் (4), சாக் க்ரொலி (22), ஹாரி ப்ரூக் (23), ஜேமி ஸ்மித் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 40 ரன்னில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் (27 ரன்) போராடி வருகிறார். இந்திய அணியில் சிராஜ், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

08:12 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test Ravindra Jadeja - உலகின் நம்பர் 1 வீரர்! யாரும் செய்யாத வரலாற்று சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.

Read Full Story
07:07 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்து வீரர் மீது மோதிய சிராஜ்! நடுவர் வார்னிங்! களத்தில் பரபரப்பு!

3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் மீது மோதிய சிராஜுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். சிராஜின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்தனர்.

Read Full Story
05:15 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test இந்திய பவுலர்கள் அபாரம்! 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் தனது 2வது இன்னிங்ஸ் விளையாடும் இங்கிலாந்து அணி 87/4 என தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் (12 ரன்), ஆலி போப் (4) சிராஜ் பந்தில் அவுட் ஆனார்கள். சாக் க்ரொலி (22) நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் கேட்ச் ஆனார். ஹாரி ப்ரூக் (23) ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். ஜோ ரூட் (13) களத்தில் உள்ளார்.

05:02 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test மனசுல கோலின்னு நினைப்பு! சுப்மன் கில்லை விமர்சித்த முன்னாள் வீரர்! அனில் கும்பிளே பதிலடி!

இந்திய கேப்டன் சுப்மன் கில்லை விமர்சித்த ஜோனாதன் ட்ராட்க்கு அனில் கும்பிளே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Read Full Story
02:58 PM (IST) Jul 13

IND vs ENG 3rd Test இந்தியா vs இங்கிலாந்து 4ம் நாள் ஆட்டம்!

இந்தியா vs இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2/0 என்ற நிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்க முயற்சிப்பார்கள். இந்தியாவை பொறுத்தவரை இங்கிலாந்தை விரைவில் ஆல் அவுட்டாகி எளிதில் சேஸ் செய்ய திட்டமிடும். ஆகையால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும். இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.