- Home
- Sports
- Sports Cricket
- ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்து வீரர் மீது மோதிய சிராஜ்! நடுவர் வார்னிங்! களத்தில் பரபரப்பு!
ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்து வீரர் மீது மோதிய சிராஜ்! நடுவர் வார்னிங்! களத்தில் பரபரப்பு!
3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் மீது மோதிய சிராஜுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். சிராஜின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்தனர்.

IND vs ENG: Mohammed Siraj Fiery Send-Off To Ben Duckett
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2/0 என்ற நிலையில் இருந்தது.
சிராஜ் செயலுக்கு கண்டனம்
இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தனர். பென் டக்கெட் 12 ரன்னில் சிராஜ் பந்தில் பும்ராவிடம் கேட்ச் ஆனார். ஆலி போப் 4 ரன்னில் சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து சாக் க்ரொலி (22 ரன்) நிதிஷ்குமார் பந்தில் கேட்ச்சும், ஹாரி ப்ரூக் (23 ரன்) ஆகாஷ் தீப் பந்தில் போல்டானர்கள். இப்படி மேட்ச் பரபரப்பாக செல்ல சிராஜ் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டுடன் மோதிய சம்பவம் பெரும் கணடனத்துக்கு வழிவகுத்துள்ளது.
பென் டக்கெட் மீது மோதினார்
அதாவது சிராஜ் பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்ற பென் டக்கெட் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அப்போது சிராஜ் விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில், டக்கெட்டின் முகத்திற்கு நேராகச் சென்று சில வார்த்தைகளை கூறி கூச்சலிட்டதுடன், அவரது தோளிலும் மோதினார். ஆனால் பென் டக்கெட் ஏதும் சொல்லாமல் அமைதியாக சென்றார். சிராஜின் இந்த செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனல் கள நடுவர் உடனடியாக சிராஜிடம் சென்று எச்சரிக்கை விடுத்தார்.
சிராஜ் இப்படி நடந்து கொள்ள கூடாது
அமைதியாக சென்ற இங்கிலாந்து வீரரிடம் வேண்டுமென்றே வம்பிழுத்த சிராஜ்க்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்தால் ஆக்ரோஷமாக கொண்டாடுவது இயல்பு. அதில் தவறில்லை. ஆனால் மற்ற வீரரை சீண்டும் விதமாக கொண்டாடுவது மிகவும் தவறு. சிராஜ் இப்படி நடந்து கொள்ள கூடாது'' என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு
''சிராஜின் கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரணி வீரர் வம்பிழுத்தால் பதிலடி கொடுக்கலாம். ஆனால் அவுட்டாகி அமைதியாக சென்ற வீரரிடம் இப்படி ஒழுங்கினமாக நடந்து கொள்வது சரியல்ல'' என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிராஜின் இந்த ஆக்ரோஷமான கொண்டாட்டம் ஐசிசி விதியை மீறிய செயல் என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
சிராஜ் ஏன் இப்படி செய்தார்?
இங்கிலாந்து வீரர்கள் 3ம் நாள் இறுதியில் செய்த செயலை சிராஜின் கோபத்துக்கு காரணம் என்று ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர். அதாவது நேற்று 3ம் நாள் இறுதியில் பும்ரா பந்துவீசும்போது சாக் க்ரொலி இரண்டு முறை வேறு வேறு காரணங்களை சொல்லி பந்துகளை எதிர்கொள்ளாமல் நேரத்தை வீணடித்தார்.
இவர் இப்படி செய்யாமல் இருந்தால் இந்தியா கூடுதலாக ஒரு ஓவர் வீசியிருக்கும். இங்கிலாந்து வீரர்களின் இந்த செயலுக்கு சுப்மன் கில், கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.