- Home
- Sports
- Sports Cricket
- அடேங்கப்பா! சொத்து மதிப்பில் விராட் கோலிக்கே டப் கொடுக்கும் முகமது சிராஜ்! இத்தனை கோடிகளா?
அடேங்கப்பா! சொத்து மதிப்பில் விராட் கோலிக்கே டப் கொடுக்கும் முகமது சிராஜ்! இத்தனை கோடிகளா?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பவுலிங்கில் அசத்தி வரும் முகமது சிராஜின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.

Mohammed Siraj Net Worth
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது பின்பு தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் முகமது சிராஜ் பாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
முகமது சிராஜ் சிறப்பான பவுலிங்
மேலும் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சிராஜ் புதிய சாதனை படைத்தார். கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் எட்ஜ்பாஸ்டனில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை சிராஜ் படைத்தார். இது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் நான்காவது ஐந்து விக்கெட் சாதனையாகும்.
இது இங்கிலாந்து மண்ணில் அவர் எடுத்த முதல் ஐந்து விக்கெட் சாதனையாகும். இந்திய அணியில் பல ஆண்டுகளாக மேட்ச் வின்னராக செயல்பட்டு வரும் சிராஜ் தனது பவுலிங் மட்டுமின்றி வருமானத்திலும் கலக்கி வருகிறார்.
சிராஜ் சொத்து மதிப்பு
முகமது சிராஜின் சொத்து மதிப்பு ரூ.57 கோடி கோடி என்று தகவல்கள் கூறுகின்றன. சிராஜ் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள பங்களாவை சொந்தமாக வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பிராண்ட் ஒப்பந்தங்கள்
மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் உள்ளார், இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.5 கோடி சம்பளம் பெறுகிறார். விளையாட்டில் மட்டுமின்றி பிராண்ட் விளம்பரங்களின் ஒப்பந்தம் மூலமும் சிராஜ் பல கோடிகள் கல்லா கட்டுகிறார். முகமது சிராஜ் MyCircle11, Be O Man, CoinSwitchKuber, Crash on the Run, MyFitness, SG மற்றும் ThumsUp போன்ற சில சிறந்த பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார்.
சொகுசு கார்களின் பிரியர்
கார்களின் பிரியரான சிராஜ் ரேஞ்ச் ரோவர் வோக், BMW 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று சிராஜும் ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார்.
அதாவது ஹைதராபாத் நகரில் ஜோஹர்பா என்ற ஒரு ஹோட்டலை திறந்துள்ளார். 'ஹைதராபாத் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தது. இந்த ஹோட்டல் மூலம் முகலாய் மசாலாப் பொருட்கள், பாரசீக மற்றும் அரேபிய உணவுகள் மற்றும் சீன உணவு வகைகளை வழங்க முடியும்' என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.