- Home
- Sports
- Sports Cricket
- இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய முகமது சிராஜ்! வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய முகமது சிராஜ்! வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
India vs England 2nd Test: India Strong Position End Of Day 3
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்து அசத்தினார். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி ப்ரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து
இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டம் தொடங்கியம் உலகின் மிகச்சிறந்த வீரர் ஜோ ரூட் (22 ரன்) முகமது சிராஜ் பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த பந்திலேயே சிராஜ் வேகத்தில் டக் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 84/5 என தடுமாறியது. அந்த அணியை விரைவில் முடக்கி விடலாம் என இந்திய வீரர்கள் நினைத்தனர்.
ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் சூப்பர் சதம்
ஆனால் ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் ஓடிஐ போன்று அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா பந்துகளை சிதறடித்தனர். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஸ்மித் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசி வெளுத்து வாங்கினார். ஸ்பின் பவுலர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஓவரையும் வெளுத்துக்கட்டி சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர்.
இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல் அவுட்
அணியின் ஸ்கோர் 387 ரன்கள் ஆனபோது ஹாரி ப்ரூக் 234 பந்தில் 17 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 ரன்கள் எடுத்து ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும். அதன்பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினார்கள். சிராஜ் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கிறிஸ் வோக்ஸ் (5), பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் மற்றும் சோயிப் பஷிர் என வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்
அதிடி சதம் விளாசிய ஜேமி ஸ்மித் 207 பந்தில் 184 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இங்கிலாந்தின் 6 பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வலுவான நிலை
பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 64 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் பாக்கி இருப்பதால் இந்த டெஸ்ட்டில் இந்தியாவின் கையே ஒங்கி இருக்கிறது.