- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG: 132 ஆண்டு கால சாதனையை முறியடித்த முகமது சிராஜ்! யாரும் கிட்ட கூட வர முடியாது!
IND vs ENG: 132 ஆண்டு கால சாதனையை முறியடித்த முகமது சிராஜ்! யாரும் கிட்ட கூட வர முடியாது!
இந்திய வீரர் முகமது சிராஜ் 132 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
IND vs ENG: Mohammed Siraj New Record
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்து வரலாறு படைத்தார். பின்பு தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முகமது சிராஜ் 6 விக்கெட்
ஒரு கட்டத்தில் 84/5 என பரிதவித்த அந்த அணியை ஹாரி ப்ரூக் (158 ரன்), ஜேமி ஸ்மித் (184 ரன் நாட் அவுட்) ஆகிய இருவரும் அதிரடி சதம் விளாசி சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் கைவிட்டதால் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் முகமது சிராஜ் அதிரடியாக விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு உதவியாக ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிராஜ் புதிய சாதனை
இந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்து அணியை முற்றிலுமாக முடக்கினார்கள். மேலும் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சிராஜ் புதிய சாதனை படைத்தார். கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் எட்ஜ்பாஸ்டனில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை சிராஜ் படைத்தார். இது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் நான்காவது ஐந்து விக்கெட் சாதனையாகும். இது இங்கிலாந்து மண்ணில் அவர் எடுத்த முதல் ஐந்து விக்கெட் சாதனையாகும்.
வெற்றியைத் தேடி தந்த சிராஜ்
இதே போல் கடந்த 2024 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சிராஜ் அபாரமாக பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் நான்கு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தது 32 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த மோசமான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பந்துகளில் சாதனை
சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை படைத்தார். மேலும், குறைந்த பந்துகளில் (16 பந்துகள்) 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சமிந்த வாஸுடன் இணைந்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் முகமது சிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.