இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார்.

IND vs ENG: Washington Sundar Shined As An All-Rounder: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்சில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலந்த் அணி சரிவுக்கு பெரும் வகித்துள்ளார். இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேனான ஜோ ரூட்டை (40 ரன்கள்) கிளீன் போல்டாக்கினார். மேலும் மற்றொரு தரமான வீரர் ஜேமி ஸ்மித்தையும் (8 ரன்) கிளீன் போல்டாக்கினார். தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சையும் (33 ரன்) தனது சூப்பர் பவுலிங்கில் போல்டாக்கி வெளியேற்றினார்.

வாஷிங்டன் சுந்தர் கலக்கல் பவுலிங்

கடைசியில் சோயிப் பஷிரையும் (2) போல்டாக்கி இங்கிலாந்து அணியை ஆல் அவுட்டாக்கினார். வாஷிங்டன் சுந்தர் 12.1 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் தனது விக்கெட்டுகளையும் போல்டு மூலம் எடுத்துள்ளது இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். முதல் இன்னிங்சில் பொறுப்புடன் பேட்டிங் செய்து 23 ரன்கள் அடித்த வாஷிங்டன் இப்போது 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார்.

திறமையை நிரூபித்து வரும் வாஷிங்டன்

இதேபோல் 2வது டெஸ்ட்டிலும் அணியின் இக்கட்டான நிலையிலும் 42 ரன்கள் அடித்து முக்கிய பங்கு வகித்தார். வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இப்போது 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

முன்னதாக, இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பென் டக்கெட் 12 ரன்னில் சிராஜ் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆலி போப் 4 ரன்னில் சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து சாக் க்ரொலி (22 ரன்) நிதிஷ்குமார் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹாரி ப்ரூக் (23 ரன்) ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார்.

இந்திய அணி வெற்றி பெறுமா?

87/4 என்று தத்தளித்த இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸும், ஜோ ரூட்டும் சிறிது மீட்டனர். ஆனால் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் (40) வாஷிங்டன் பந்தில் போல்டானார். இதன்பின்பு பென் ஸ்டோக்ஸ் (33), ஜேமி ஸ்மித்தும் (8) அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து அணி அப்படியே தடம் புரண்டது. கடைசியில் வோக்ஸ் (10), கார்ஸ் (1) ஆகியோரை பும்ரா காலி செய்ய இங்கிலாந்து அணி வெறும் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 193 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்கிறது.