இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 454 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் (Border Gavaskar Trophy) 4வது போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணி 454 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

Scroll to load tweet…

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களும், லபுஷ்சாங்கே 72, அறிமுக வீரர் சாம் கொனஸ்டாஸ் 60, உஸ்மான் கவாஜா 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி (Team India) சார்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Scroll to load tweet…

டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் பாக்சிங் டே டெஸ்டில் (Boxing Day Test) வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கி உள்ளது. இதனிடையே 454 என்ற ஸ்கோரை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.