ஓரம்போ ஓரம்போ…டெல்லியில் சிஎஸ்கே வீரர்கள் வந்த பஸ்ஸை சூழந்து கொண்ட ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வந்த பஸ்ஸை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக ஐபிஎல் 16ஆவது சீசனும் முடியப் போகிறது. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து, 2, 3 மற்றும் 4ஆவது இடங்களுக்கான போட்டியில் சென்னை, லக்னோ, மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
இதில், இன்று டெல்லியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதற்காக சென்னை வீரர்கள் மைதானத்திற்கு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வந்த பஸ்ஸை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் தோனி, தோனி என்றும், சிஎஸ்கே என்றும் கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!
டெல்லிக்கு எதிராக தற்போது நடந்து வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் 2ஆவது அணியாக செல்லும். இல்லையென்றால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது வரையில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்பிற்கு 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு: இல்லாட்டி நடையை கட்ட வேண்டியது தான்!
ஒரே சீசனில் மோசமான சாதனை படைத்த வீரர்களில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர்!