சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு: இல்லாட்டி நடையை கட்ட வேண்டியது தான்!
டெல்லிக்கு எதிராக இன்றைய போட்டியில் சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டும்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கடந்த சீசனில் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. தனது சொந்த மண்ணில் கடைசியாக நடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஒரே சீசனில் மோசமான சாதனை படைத்த வீரர்களில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர்!
கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்குள் 2ஆவது அணியாக சென்றிருக்கும். ஆனால், தோல்வி அடைந்த நிலையில், டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை உண்டாகும்.
15 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
டெல்லி கேபிடல்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், டெல்லியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான ஒன்றல்ல. இன்றைய போட்டியில் சென்னை தோற்று, லக்னோ, ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகள் கடைசி லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!