இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி உள்ளிட்ட 5 போட்டிகளுக்கு பிட்ச் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஆவரேஜ் மதிப்பீடு அளித்துள்ளது.

இந்தியாவில் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்கள் வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், இந்தியா விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட அனைத்திலும் வெற்றி வாகை சூடியது. ஆனால், முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

ஸ்ரீசாந்திற்கு ஆதரவாக களமிறங்கிய அவரது மனைவி புவனேஷ்வரி – காம்பீர் வளர்ப்பு சரியில்லை என குற்றச்சாட்டு!

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அகமதாபாத் பிட்ச் தான் காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் அதனை உறுதி செய்யும் வகையில் ஐசிசி மதிப்பீடு அளித்துள்ளது. அதில், அகமதாபாத் மைதானம் ஆவரேஜ் ஆக இருந்தது என்று மதிப்பீடு அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியா விளையாடிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையில் நடந்த மைதானம் ஆவரேஜ் தான் என்று மதிப்பீடு அளித்துள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2ஆவது போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி – ஸ்பெயின் முதலிடம்!

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ஐசிசி நடத்தினாலும், அந்த தொடர் தங்களது விதிமுறைகளை பின்பற்றி நடக்கிறதா என்று அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் ஒரு பகுதியாகத் தான் தற்போது பிட்ச் குறித்து ஆவரேஜ் மதிப்பீடு அளித்துள்ளது. இதில், இந்தியா விளையாடிய 5 போட்டிகள் சராசரியானது என்று குறிப்பிட்டுள்ளது.

இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!

Scroll to load tweet…