இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!

இந்திய ரசிகர்களை விமர்சித்ததற்காக தான் வருத்தப்படுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

harry Brook Said That Now I Feel, I shouldn't have said that to the Indian fans during Last IPL Season rsk

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. நடந்து முடிந்த 16ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இங்கிலாந்து வீரர் ஹாரி ஃப்ரூக் ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அவர் விளையாடிய 11 போட்டிகளில் அவர், ஒரு சதம் உள்பட 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை.

புதிதாக 2 அணிகள் அறிமுகம்; சென்னை பிளிட்ஸில் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர்!

இதன் காரணமாக வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கும் ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஹாரி ஃப்ரூக் விடுவிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி, சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ரந்த் சர்மா, அகீல் ஹூசைன், அடில் ரஷீத் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!

இந்த நிலையில், கடந்த சீசனில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை விமர்சித்ததற்காக தான் வருத்தப்படுவதாக ஹாரி ஃப்ரூக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு முட்டாள். நேகாணலின் போது இப்படியொரு விஷயத்தை நான் கூறியிருக்க கூடாது. ஐபிஎல் தொடரின் போது அதிக நேரம் ஓய்வெடுக்க முடியும். அப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, தேவையற்ற விஷயங்களை பார்க்க நேர்ந்தது.

Bangladesh vs New Zealand 2nd Test Day 1: வங்கதேசம் 172க்கு அவுட் – நியூசிலாந்து 55/5 ரன்கள் எடுத்து திணறல்!

அதன் பிறகு சோஷியல் மீடியாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். ஆனால், இப்போது நான் சோஷியல் மீடியாவில் இருக்கிறேன். அதனை நான் பயன்படுத்தமாட்டேன். தனியாக அட்மின் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios