ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2ஆவது போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி – ஸ்பெயின் முதலிடம்!
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தனது 2ஆவது போட்டியில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது.
ஆண்டுதோறும் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 13ஆவது சீசன் இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மலேசியாவின் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த ஹாக்கி தொடரானது வரும், 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில், 16 அணிகள் இடம் பெற்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!
sஇதில், ஏ பிரிவில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா ஆகிய அணிகளும் பி பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய அணிகளும், சி பிரிவில் இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், கனடா ஆகிய அணிகளும், டி பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
புதிதாக 2 அணிகள் அறிமுகம்; சென்னை பிளிட்ஸில் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர்!
இதில், இந்தியா தனது முதல் போட்டியில் கொரியாவை வீழ்த்தி வெற்றியோடு இந்த தொடரை தொடங்கியது. இதையடுத்து நேற்று நடந்த 2ஆவது போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில், தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் அடித்து வந்தனர். போட்டியில் முதல் நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் காப்ரே வெர்டெல் கோல் அடித்தார். அடுத்து 18ஆவது நிமிடத்தில் ஆண்ட்ரே ரஃபி கோல் அடித்தார். மீண்டும் வெர்டெல் 41 ஆவது நிமிடத்திலும், ரஃபி 60ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 33ஆவது நிமிடத்தில் கிடத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் ரோகித் ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி 5 நிமிடத்தில் இந்திய அணிக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய வீரர்கள் அதனை கோட்டைவிட்டனர். இறுதியாக ஸ்பெயின் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலமாக ஸ்பெயின் விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!
நாளை 9 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Andreas Rafi
- FIH Hockes Junior World Cup 2023 pools
- FIH Hockey Mens Junior World Cup 2023
- FIH Hockey Mens Junior World Cup 2023 India squad
- India
- India vs Canada
- India vs Spain
- Indian mens hockey team
- Junior Mens Hockey World Cup
- Junior World Cup Schedule 2023
- Malaysia National Hockey Stadium
- Mens Junior World Cup 2023 Hockey
- Pol Cabre Verdiell
- Republic of Korea
- Rohit
- South Korea