ஸ்ரீசாந்திற்கு ஆதரவாக களமிறங்கிய அவரது மனைவி புவனேஷ்வரி – காம்பீர் வளர்ப்பு சரியில்லை என குற்றச்சாட்டு!
லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் கவுதம் காம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சீசன் தொடங்கியது. இதில், 4 அணிகள் இடம் பெற்று விளையாடின. இந்த சீசனில் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணி சாம்பியனானது.
இதையடுத்து இந்த சீசனுக்கான போட்டியானது கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. இதில், புதிதாக அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் இந்தியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் போது இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்ரீசாந்த் அவரைப் பார்த்து முறைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காம்பீர் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.
இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!
அதன் பிறகு கவுதம் காம்பீர் அவரைப் பார்த்து ஏதோ சொல்ல இருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நடுவர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பார்த்தீவ் படேல் ஆகியோர் சமாதானம் செய்து வைத்தனர். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கவுதம் காம்பீர் காரணமே இல்லாமல் சக வீரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார். மூத்த வீரர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கமாட்டார்.
புதிதாக 2 அணிகள் அறிமுகம்; சென்னை பிளிட்ஸில் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர்!
மேலும், தன்னை மேட்ச் பிக்ஸிங் செய்பவர் என்றும், எஃப் என்று தொடங்கும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டியதாகவும், நடுவரையும் அதே வார்த்தையைப் பயன்படுத்தி திட்டியதாகவும் கூறியுள்ளார். ஸ்ரீசாந்திற்கு ஆதரவாக அவரது மனைவி புவனேஷ்வரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து புவனேஷ்வரி ஸ்ரீசாந்த் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக தன்னுடன் இந்தியாவுக்காக விளையாடிய ஒரு வீரர் இந்த நிலைக்குத் தள்ள முடியும் என்று ஸ்ரீயிடம் இருந்து கேட்டது அதிர்ச்சியளிக்கிறது.
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் இவ்வாறு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ப்பு மிகவும் முக்கியமானது, மேலும் இதுபோன்ற நடத்தை மைதானத்தில் காட்டப்படும் போது அது காண்பிக்கப்படும். அதிர்ச்சி, உண்மையிலேயே அதிர்ச்சி, என்று இன்ஸ்டா பதிவில் பதிவிட்டுள்ளார்.