கடைசி ஓவர் இவர் போடவில்லையென்றால் கொல்கத்தா ஜெயிச்சிருக்காது - தமிழக வீரருக்கு, ஹர்பஜன் சிங் பாராட்டு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடைசி ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார், அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Harbhajan Singh Praise KKR Player Varun Chakaravarthy for his Last Over Against SRH in Hyderabad

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 47ஆவது ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 20 ரன்களுக்கு வெளியேறினார். வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்களூக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

முதல் முறையாக மோதும் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்: சாம்பியன்ஸ் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

அதன்பின்னர் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 31 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிதிஷ் ராணா. அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 35 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 24 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், மாயங்க் அகர்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த ராகுல் த்ரிபாதி கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்த சீசனில் சதம் அடித்த ஹாரி ப்ரூக் களமிறங்கினார். ஆனால், அவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படியெல்லாம் தோற்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம்!

கேப்டன் எய்டன் மார்க்ரம் போராடி 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ஒரு ரன்னாக எடுத்தால் கூட எளிதாக ஹைதராபாத் வெற்றி பெற்றிருக்கலாம். தன்னிடம் இருந்த வெற்றியை கொல்கத்தாவிற்கு தாரைவார்த்து கொடுத்தத்து தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருண் சக்கரவர்த்தி 16ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அவர் 4 ரன் மட்டுமே கொடுத்தார். 18ஆவது ஓவரையும் அவர் தான் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார். இறுதியில் மழை தூரல் வேறு விழுந்து கொண்டிருந்தது. இதனால் டக் ஒர்த் லீவிஸ் முறை என்றால் ஹைதராபாத் அணிக்கு ஒரு ரன் தேவை. ஆனால், அப்படி மழை ஒன்றும் பெரிதாக இல்லை என்றதால் போட்டி தொடர்ந்து நடந்தது. 19ஆவது ஓவரில் 12 ரன்கள் கொடுக்கப்பட்ட நிலையில் கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நான் போடுறேன் என்று கேட்டு வாங்கிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது!

யாரை போட வைக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டிருந்த போது நான் வீசுகிறேன். என்னிடம் பந்தை கொடு என்று கேட்டு வாங்கி வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். அவரது தைரியம், தன்னம்பிக்கைக்கு உரிய பதிலும் கிடைத்தது. அதன்படி, முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவ பந்தில் எக்ஸ்டிரா மூலமாக ஒரு ரன் கிடைத்தது. 3ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். 

4ஆவது பந்தில் மாயங்க் மார்க்கண்டே ரன் ஏதும் எடுக்காத நிலையில், 5ஆவது பந்தில் ஒரு எடுக்க, கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தன்னிடமிருந்த வெற்றியை தாரை வார்த்து கொடுத்த ஹைதராபாத்; லட்டு மாதிரி வாங்கிச் சென்ற கொல்கத்தா!

இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 8ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. கடைசி 6 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை யார் வீசுவது என்று கேகேஆர் அணிகளுக்கு இடையில் விவாதம் நடந்தது. அப்போது தானாக முன்வந்து கடைசி ஓவர் நான் வீசுகிறேன்.  பந்தை என்னிடம் கொடு என்று வருண் சக்கரவர்த்தி கேட்டு வாங்கினார். ஆனால், அந்த ஓவர் வீசி முடிப்பதற்குள் குர்பாஸ், ராணா, ரஸல் என்று ஒவ்வொருவரும் வருண் சக்கரவர்த்தியிடம் ஆலோசிக்க தொடங்கினர். பீல்டிங் மாற்றமும் அடிக்கடி மாற்றப்பட்டது. 

த்ரில் நிறைந்த அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்றது. இதில், 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 20 ரன்கள் கொடுத்ததோடு அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த நிலையில், இது குறித்து ஹர்பஜன் சிங் குறியிருப்பதாவது: நிதிஷ் ராணா மற்றும் ரின்கு சிங்கின் ஆட்டத்தால் கொல்கத்தா 171 ரன்கள் குவித்தது. சூப்பர் கேப்டன்ஷிப், கடைசி ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்து வீசியது எவ்வளவு நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios