MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இப்படியெல்லாம் தோற்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம்!

இப்படியெல்லாம் தோற்றால் வருத்தமாகத்தான் இருக்கிறது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம்!

வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்த அணி தோல்வியை தழுவிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு வந்துவிட்டார்.

3 Min read
Author : Rsiva kumar
Published : May 05 2023, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 47ஆவது ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 20 ரன்களுக்கு வெளியேறினார். வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்களூக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அதன்பின்னர் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 31 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிதிஷ் ராணா. அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 35 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 24 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
 

310
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், மாயங்க் அகர்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த ராகுல் த்ரிபாதி கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்த சீசனில் சதம் அடித்த ஹாரி ப்ரூக் களமிறங்கினார். ஆனால், அவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

410
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கேப்டன் எய்டன் மார்க்ரம் போராடி 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ஒரு ரன்னாக எடுத்தால் கூட எளிதாக ஹைதராபாத் வெற்றி பெற்றிருக்கலாம். தன்னிடம் இருந்த வெற்றியை கொல்கத்தாவிற்கு தாரைவார்த்து கொடுத்தத்து தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

510
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வருண் சக்கரவர்த்தி 16ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அவர் 4 ரன் மட்டுமே கொடுத்தார். 18ஆவது ஓவரையும் அவர் தான் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார். இறுதியில் மழை தூரல் வேறு விழுந்து கொண்டிருந்தது. இதனால் டக் ஒர்த் லீவிஸ் முறை என்றால் ஹைதராபாத் அணிக்கு ஒரு ரன் தேவை. ஆனால், அப்படி மழை ஒன்றும் பெரிதாக இல்லை என்றதால் போட்டி தொடர்ந்து நடந்தது. 19ஆவது ஓவரில் 12 ரன்கள் கொடுக்கப்பட்ட நிலையில் கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
 

610
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

யாரை போட வைக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டிருந்த போது நான் வீசுகிறேன். என்னிடம் பந்தை கொடு என்று கேட்டு வாங்கி வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். அவரது தைரியம், தன்னம்பிக்கைக்கு உரிய பதிலும் கிடைத்தது. அதன்படி, முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவ பந்தில் எக்ஸ்டிரா மூலமாக ஒரு ரன் கிடைத்தது. 3ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். 
 

710
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

4ஆவது பந்தில் மாயங்க் மார்க்கண்டே ரன் ஏதும் எடுக்காத நிலையில், 5ஆவது பந்தில் ஒரு எடுக்க, கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 

810
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 8ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. இந்த தோல்விக்குப் பின் பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில், இந்தப் போட்டியில் நாங்கள் நெருக்கடியான சூழ்நிலையில் தவறான முடிவை எடுத்து ஆட்டம் இழக்கிறோம். இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ளத்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
 

910
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

எனது பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. கிளாசென் சிறப்பாக ஆடினார். எங்களது பார்ட்னர்ஷிப் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்க வேண்டும். அப்படி பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். இந்தப் போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். 
 

1010
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பீல்டிங்கிலும் நன்றாக செயல்பட்டார்கள். ஆனால், பேட்டிங் பார்ட்னர்ஷிப் தான் எங்களால் அமைக்கமுடியவில்லை. அதிரடியாக ஆட வேண்டும் என்று தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். மீதமுள்ள 4 போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இந்த சூழலில் எங்களது வீரர்களின் திறமைகள் வெளிவரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
NZ vs IND : 2வது டெஸ்டிலும் அதே மிஸ்டேக் செய்த இந்தியா... முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
மீண்டும் கேப்டன் அவதாரம் எடுக்கும் ரோஹித்? MI வெளியிட்ட பதிவால்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Recommended image3
IPL 2027 Auction: 2 கோடி அடிப்படை விலையில் 2 இந்தியர்கள் மட்டுமே.. மீண்டும் வரும் ஸ்டார் ஆல்ரவுண்டர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved