MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நான் போடுறேன் என்று கேட்டு வாங்கிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது!

ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நான் போடுறேன் என்று கேட்டு வாங்கிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடைசி ஓவரை யார் போடுவது என்று விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், அதனை நான் வீசுகிறேன் என்று கேட்டு வாங்கி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

3 Min read
Author : Rsiva kumar
Published : May 05 2023, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 47ஆவது ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 20 ரன்களுக்கு வெளியேறினார். வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்களூக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அதன்பின்னர் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 31 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிதிஷ் ராணா. அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 35 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 24 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
 

310
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், மாயங்க் அகர்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த ராகுல் த்ரிபாதி கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்த சீசனில் சதம் அடித்த ஹாரி ப்ரூக் களமிறங்கினார். ஆனால், அவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

410
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேப்டன் எய்டன் மார்க்ரம் போராடி 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ஒரு ரன்னாக எடுத்தால் கூட எளிதாக ஹைதராபாத் வெற்றி பெற்றிருக்கலாம். தன்னிடம் இருந்த வெற்றியை கொல்கத்தாவிற்கு தாரைவார்த்து கொடுத்தத்து தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

510
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வருண் சக்கரவர்த்தி 16ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அவர் 4 ரன் மட்டுமே கொடுத்தார். 18ஆவது ஓவரையும் அவர் தான் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார். இறுதியில் மழை தூரல் வேறு விழுந்து கொண்டிருந்தது. இதனால் டக் ஒர்த் லீவிஸ் முறை என்றால் ஹைதராபாத் அணிக்கு ஒரு ரன் தேவை. ஆனால், அப்படி மழை ஒன்றும் பெரிதாக இல்லை என்றதால் போட்டி தொடர்ந்து நடந்தது. 19ஆவது ஓவரில் 12 ரன்கள் கொடுக்கப்பட்ட நிலையில் கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
 

610
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

யாரை போட வைக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டிருந்த போது நான் வீசுகிறேன். என்னிடம் பந்தை கொடு என்று கேட்டு வாங்கி வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். அவரது தைரியம், தன்னம்பிக்கைக்கு உரிய பதிலும் கிடைத்தது. அதன்படி, முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவ பந்தில் எக்ஸ்டிரா மூலமாக ஒரு ரன் கிடைத்தது. 3ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். 

710
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

4ஆவது பந்தில் மாயங்க் மார்க்கண்டே ரன் ஏதும் எடுக்காத நிலையில், 5ஆவது பந்தில் ஒரு எடுக்க, கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

810
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 8ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. கடைசி 6 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை யார் வீசுவது என்று கேகேஆர் அணிகளுக்கு இடையில் விவாதம் நடந்தது. அப்போது தானாக முன்வந்து கடைசி ஓவர் நான் வீசுகிறேன். 

910
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பந்தை என்னிடம் கொடு என்று வருண் சக்கரவர்த்தி கேட்டு வாங்கினார். ஆனால், அந்த ஓவர் வீசி முடிப்பதற்குள் குர்பாஸ், ராணா, ரஸல் என்று ஒவ்வொருவரும் வருண் சக்கரவர்த்தியிடம் ஆலோசிக்க தொடங்கினர். பீல்டிங் மாற்றமும் அடிக்கடி மாற்றப்பட்டது.

1010
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

த்ரில் நிறைந்த அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்றது. இதில், 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 20 ரன்கள் கொடுத்ததோடு அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image2
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image3
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved