IPL 2023: உங்கள் சேவை எங்களுக்கு தேவை தம்பி.. தமிழக வீரர் பக்கம் திரும்பிய கேகேஆர்.! GT-யில் பாண்டியா இல்ல
ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
IPL 2023: வெற்றியே பெறாத SRH & தோல்வியே அடையாத PBKS பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் ஆடவில்லை. எனவே ரஷீத் கான் கேப்டன்சி செய்கிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிம் சௌதிக்கு பதிலாக லாக்கி ஃபெர்குசனும், மந்தீப் சிங்கிற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த நாராயண் ஜெகதீசனும் ஆடுகின்றனர். உள்நாட்டு போட்டிகளில் சதங்களை குவித்து சாதனை படைத்த ஜெகதீசனை முதல் போட்டியிலேயே கேகேஆர் அணி ஆடவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் 2 போட்டிகளில் அவர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஓபனிங்கில் சரியாக பார்ட்னர்ஷிப் அமையாததால் வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நாராயண் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், சுயாஷ் ஷர்மா, லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர், ரஷீத் கான்(கேப்டன்), முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால்.