IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த 15 சீசனில் 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது சிஎஸ்கே. சிஎஸ்கே அணி 2 சீசனை தவிர, மற்ற ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.
ஐபிஎல்லில் ஃபைனல் வரை செல்வதையும், கோப்பையை வெல்வதையும் ஒரு வழக்கமாகவே வைத்துள்ள அணி சிஎஸ்கே. அந்தளவிற்கு அந்த அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். எனவே சிஎஸ்கே அணி தொடர்ந்து இதேமாதிரி ஜொலிக்க வேண்டுமானால் அதற்கு சிறப்பான கேப்டன் அவசியம்.
அந்த பையன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மாதிரி.. மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்
எனவே தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வலுத்துவருகிறது. தான் இருக்கும்போதே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்துவிட வேண்டும் என நினைத்த தோனி, கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கினார். ஆனால் ஜடேஜா கேப்டன்சியில் ஜொலிக்கவில்லை. அவரது கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது. மேலும் ஜடேஜா ஒரு கேப்டனாக சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலும் இருந்தது. தோனியின் தலையீடுகள் அதிகம் இருந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா.
அதன்பின்னர் சிஎஸ்கே அணியுடனான மோதல் போக்கையும் மீறி, ஜடேஜா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டார். ஆனால் அடுத்த கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட இனிமேல் வாய்ப்பில்லை. எனவே தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனியை போன்ற மிகவும் கூலான, நிதானமான, தெளிவான ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். அவர் சிறந்த வீரராகவும் இருக்க வேண்டும்.
கேப்டன்சிக்கான ரேஸில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் உள்ளனர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசிய மொயின் அலி, தோனிக்கு அடுத்து பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். ஆனால் இப்போதைக்கு தோனி தான் கேப்டன். மற்ற சில சிறந்த வீரர்களும் இருக்கின்றனர். ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர். எனவே கேப்டனை நியமிப்பது குறித்து சிஎஸ்கே அணி முடிவெடுக்கும் என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.