வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி 5 முக்கியமான வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில், இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின். மழை காரணமாக முதல் நாளில் நடக்க வேண்டிய இறுதிப் போட்டி அடுத்த நாள் நடந்தது. அப்போதும் மழை குறுக்கீடு இருந்தது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், இருக்கும் வீரர்களில் இந்த சீசனில் சொதப்பிய 5 வீரர்களை விடுவித்து, அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளது.

யாஷ் தயாள்:

இவர், 14 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் சிறந்த பந்து வீச்சாக 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியது கருதப்படுகிறது. இந்த சீசனில் மிகவும் மோசமான பந்து வீச்சாளர்களில் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் அடிக்க விட்டுள்ளார். ஆதலால் இவர் தான் முதல் வீரராக விடுவிடுக்கப்பட இருக்கிறார்.

டிவி அம்பயரை விமர்சித்த கில்லிற்கு சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம், டீமுக்கு 100 சதவிகிதம் அபராதம்!

கேன் வில்லியம்சன்:

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே காயம் அடைந்த நிலையில் தொடரிலிருந்து வெளியேறினார். இதுவரையில் 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கேன் வில்லியம்சன் 2101 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 182 பவுண்டரிகள் மற்றும் 64 சிக்ஸர்கள் அடங்கும்.

TNPL 2023 Players Salary: சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 6 லட்சம்!

பிரதீப் சங்வான்:

குஜராத் அணி சார்பில் ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதுவரையில் 42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பிரதீப் சங்வான், 38 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் சிறந்த பந்து வீச்சாக 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். வரும் ஆண்டிற்கான ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தில் இவர் விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

TNPL 2023: முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் பலப்பரீட்சை!

தசுன் ஷனாகா:

குஜராத் அணியில் ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தசுன் ஷனாகா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதோடு, பீல்டிங்கிலும் சொதப்பியுள்ளார். ஆதலால், இந்த சீசனில் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஓடியன் ஸ்மித்:

இதுவரையில் 6 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஓடியன் ஸ்மித் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடினார். இனி வரும் சீசனில் இவர் குஜராத் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.