டிவி அம்பயரை விமர்சித்த கில்லிற்கு சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம், டீமுக்கு 100 சதவிகிதம் அபராதம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டிவி அம்பயரை விமர்சித்த சுப்மன் கில்லிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர், 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோகித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49 ரன்களும், அஜிங்கியா ரஹானே 46 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
TNPL 2023: முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் பலப்பரீட்சை!
இந்த தோல்வியின் மூலமாக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், தனக்கு தவறான அவுட் கொடுத்ததாக நடுவரை விமர்சனம் செய்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அணிக்கு காலதாமதமாக பந்து வீசியதற்கு (ஸ்லோ ஓவர் ரேட்) 100 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ஆஸ்திரேலியாவுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 80 சதவிகிதம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வினை எடுக்காத போதே இந்தியா மனதளவில் தோற்றுவிட்டது – விரேந்திர சேவாக்!