ஐபிஎல் 2023 – 16ஆவது சீசனில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த சுப்மன் கில்!
பதினாறாவது ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் சுப்மன் கில் 890 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் வேட்டை தொடங்கினர். இதில் கில் 3 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார்.
மழைக்கு வாய்ப்பில்லை: இன்று 40 ஓவர்கள் போட்டி தானாம்: சென்னை - குஜராத் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
இதையடுத்து அதிரடி காட்டிய கில் 7 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஜடேஜா ஓவரில் இறங்கி அடிக்க முயற்சித்து தோனியின் ஸ்டெம்பிங்கில் சிக்கி ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்தப் போட்டியில் 39 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்த சீசனில் 17 போட்டிகள் விளையாடி அவர் 890 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 78 பவுண்டரிகளும், 33 சிக்ஸர்களும் அடங்கும்.
CSK vs GT IPL Finals 2023: ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்!
இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். ஆரஞ்சு கேப் இவர் தான் வைத்துள்ளார். 2ஆவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டெவான் கான்வே 15 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் இன்னும் ஆடவில்லை.
டெல்லியில் அத்துமீறிய காவல்துறை: மல்யுத்த வீரர்களை துன்புறுத்தி கைது செய்யும் வீடியோ!
ஐபிஎல் சீசனிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:
973 ரன்கள் - விராட் கோலி - ஆர்சிபி – 201 6ஆம் ஆண்டு
890 ரன்கள் – சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ் – 2023 ஆம் ஆண்டு
863 ரன்கள் – ஜோஸ் பட்லர் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2022 ஆம் ஆண்டு
848 ரன்கள் – டேவிட் வார்னர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2016 ஆம் ஆண்டு
735 ரன்கள் – கனே வில்லியம்சன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2018 ஆம் ஆண்டு
வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
128 – ஜோஸ் பட்லர் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2022
122 – விராட் கோலி – ஆர்சிபி – 2016
119 – டேவிட் வார்னர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2016
118 – சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ் - 2023