ஆறுதல் கொடுத்த கிரேஸ் ஹாரிஸ் - ஆளு ஆளுக்கு அவுட்டான யார் தான் அடிக்கிறது? யுபி வாரியர்ஸ் 135!

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய யுபி வாரியர்ஸ் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 
 

Grace Harris gave maximum effort, UP Warriorz scored 135 runs against Royal Challengers Bangalore in WPL 2023

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் கடந்த 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக மும்பை அணி பிளே ஆஃப் சுற்று முன்னேறியுள்ளது. இதற்கு மாறாக 5 போட்டிகளிலும் தோல்வி கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு கடைசி வாய்ப்பாக இன்றைய போட்டி அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவினால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

கோலி, ரோகித் சர்மாவுக்கு கிளம்பும் நேரம் வந்துருச்சா? பிருத்வி ஷாவிற்கு ஏன் வாய்ப்பு இல்லை? முரளி விஜய் கேள்வி

ஆர்சிபி அணி:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எல்லீஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா சோபனா, ரேணுகா தாகூர் சிங், கனிகா அஹுஜா.

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, கிரன் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், ஷோஃபி எக்லிஸ்டோன், ஷ்வேதா செராவத், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட்.

உள்ளேயா? வெளியேவா? ஆட்டத்தில் ஆர்சிபி; தோத்தா சீன் முடிஞ்சது! ஆர்சிபி பவுலிங்!

யுபு வாரியர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். இதன் காரணமாக யுபி வாரியர்ஸ் அணியில் அலைஸா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா இருவரும் களமிறங்கினர். இதில், வைத்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர் அலைஸா ஹீலியும் ஒரு ரன்னில் வெளியேறினர்.

காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடைபயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்!

பின்னர், டாலியா மெக்ராத் 2 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஓரளவு ரன்கள் சேர்த்த கிரண் நவ்கிரே, 22 ரன்கள் சேர்த்த நிலையில் நடையை கட்டினார். தொடர்ந்து, சிம்ரன் ஷேக் 2 ரன்னிலும் வெளியேறினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து யுபி வாரியர்ஸ் அணி தடுமாறியது. அப்போது தான் தீப்தி ஷர்மா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடி ரன்கள் குவித்தனர். எனினும், தீப்தி ஷர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று கிரேஸ் ஹாரிஸ் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இவர், 46 ரன்களில் வெளியேறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸைப் போன்று மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் தகுதி - வரலாற்று சாதனையில் டைட்டில் வின் பண்ணுமா?

அதன் பின்னர் வந்த ஷ்வேதா செராவத் 6 ரன்களும், ஷோஃபி எக்லிஸ்டோன் 12 ரன்களும், அஞ்சலி சர்வானி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக் யுபி வாரியர்ஸ் 19.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் எல்லீஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளும், ஆஷா ஷோபனா மற்றும் ஷோஃபி டிவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மேகன் ஸ்கட் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 

ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios