ராஜஸ்தான் ராயல்ஸைப் போன்று மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் தகுதி - வரலாற்று சாதனையில் டைட்டில் வின் பண்ணுமா?

மகளிர் பிரீமியர் லிக் தொடரில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 

Mumbai Indians is the first team to Entered into Play Offs in WPL History

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் கடந்த 4 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மொத்தமாக 5 அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகள் விளையாட வேண்டும். அப்படி ஒரு அணிக்கு மொத்தமாக 8 போட்டிகள் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையில் எலிமினேட்டர் போட்டி நடக்கும். இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?

தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (5 வெற்றி) உள்ளது. 2ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் (4 வெற்றி), 3ஆவது இடத்தில் யுபி வாரியஸ் அணியும் (2 வெற்றி) 4ஆவது இடத்தில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியும் (1 வெற்றி) உள்ளன. கடைசி இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

ஷமி, உமேஷ் யாதவ், சிராஜிற்கு டியூப் பந்து அனுப்பி வைப்பு; நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய அறிவுறுத்தல்!

இந்த நிலையில், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது. தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று எந்தப் போட்டியிலும் தோற்காமல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது. அது மட்டுமின்றி நடந்த 5 போட்டிகளில் 3 முறை ஆட்டநாயகி விருது பெற்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆண்களுக்கான ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி அந்த அணி தான் முதல் சீசனுக்கான வெற்றிக் கோப்பையையும் தட்டிச் சென்றது.

எப்படியும் 6 டீம் வெளிய போயிடும் - லாஸ்ட்டுல ஃபர்ஸ்ட் யாரு வர்றாங்களோ அவங்க இங்கிலாந்துக்கு ஃபர்ஸ்டா போவாங்க!

அதே போன்று தான் தற்போது முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையோடு எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடி முதல் சீசனுக்கான டிராபியை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mumbai Indians is the first team to Entered into Play Offs in WPL History

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios