நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த கிளென் மேக்ஸ்வெல் சதத்தை தனது அன்பு மகன் லோகன் மேவரிக் மேக்ஸ்வெல்லிற்கு அர்ப்பணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து இடையிலான 24 ஆவது லீக் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்மித் 71 ரன்களில் வெளியேறினார்.

AUS vs NED: நெதர்லாந்தை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா – வார்னர், மேக்ஸ்வெல் சதம் – ஆஸி.,399 ரன்கள் குவிப்பு!

இவரைத் தொடர்ந்து மார்னஷ் லபுஷேன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 100 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பையில் தனது 2ஆவது சதம் அடித்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 22அவது சதத்தை பதிவு செய்தார். இதுதவிர உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார்.

SA vs BAN: அரையிறுதி வாய்ப்பு அவ்வளவு தான் – 5ஆவது இடம் பிடிக்க கடைசி வரை போராடுவோம் – ஷாகிப் அல் ஹசன்!

மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் 6 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ரோகித் சர்மாவின் சதங்கள் (7) சாதனையை சமன் செய்வார். குறைவான இன்னிங்ஸ்களில் (153 இன்னிங்ஸ்) விளையாடி 22 சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்களில் வெளியேற, டேவிட் வார்னர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தனர். இதில் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் சதம் விளாசினார். இதனை தனது மகன் லோகன் மாவெரிக் மேக்ஸ்வெல்லிற்கு அர்ப்பணித்துள்ளார்.

Asian Para Games: ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற சுந்தர் சிங், ரிங்கு ஹூடா, அஜீத் சிங் யாதவ்!

முதல் 27 பந்துகளில் அரைசதம் அடித்து ஒரு நாள் போட்டிகளில் 24ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு வெறும் 13 பந்துகளில் 2ஆவது அரைசதம் அடித்து மொத்தமாக 40 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் தனது முதல் சதம் அடித்தார். இதன் மூலமாக குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Scroll to load tweet…

இதற்கு முன்னதாக எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஏபி டிவிலியர்ஸ் 52 பந்துகளில் சதம் அடித்திருந்தார். கடைசியாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக கம்மின்ஸ் 12 ரன்கள், ஆடம் ஜம்பா 1 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

Hangzhou Asian Para Games: 1500 மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா தங்கம் வென்று சாதனை!

Scroll to load tweet…