Asian Para Games: ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற சுந்தர் சிங், ரிங்கு ஹூடா, அஜீத் சிங் யாதவ்!

ஹாங்சோவில் தற்போது நடந்து முடிந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 3 பதக்கங்களை சுந்தர் சிங், ரிங்கு ஹூடா, அஜீத் சிங் யாதவ் ஆகியோர் வென்றுள்ளனர்.

Sundar Singh Gurjar, Rinku Hooda and Ajeet Singh Yadav are won Gold, Silver and Bronze medal respectively in Javelin Throw F46 event at Asian Para Games Hangzhou

சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.

Hangzhou Asian Para Games: 1500 மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா தங்கம் வென்று சாதனை!

 

மூன்றாம் நாளான இன்று காலை முதலே இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று வரையில் இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று மொத்தமாக 35 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் தான் இன்று காலை முதல் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இதில், ஈட்டி எறிதல, F64 பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மூன்று சுற்றுகளில் அவர் கடைசியாக எறிந்த 73.29 மீ தூரம் பாரா விளையாட்டில் புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது. இதன் மூலமாக அவர் தங்கம் வென்றார்.

Australia vs Netherlands: மார்கஸ் ஸ்டோய்னிஸ் விலகல் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்!

 

இதே போன்று ஈட்டி எறிதலில் இந்தியாவின் புஷ்பேந்திரா சிங் 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஈட்டி எறிதல் F37/38 பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் ஹானி 55.97 மீ தூரம் எறிந்து உலகக் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான வட்டு எறிதல் F54/F55 பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி கசானா 22.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் சிங்கிள்ஸ் கிளாஸ் – 4ல் இந்தியாவின் பவீனா படேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Hardik Pandya: கணுக்கால் காயம், இங்கிலாந்து, இலங்கை போட்டியிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்பில்லை!

ஆண்களுக்கான 200 மீ T37 பிரிவில் இந்தியாவின் ஷ்ரேயன்ஷ் திரிவேதி பந்தய தூரத்தை 25.26 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பறினார். மற்றொரு போட்டியில் 200 மீ T35 பிரிவில் இந்தியாவின் நாராயண் தாக்கூர் பந்தய தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பறினார். பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்தியாவின் மணீஷா ராமதாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் மானசி ஜோஷி வெண்கலம் கைப்பற்றினார்.

மேலும், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் ஜோடி வெண்கல பதக்கம் கைப்பற்றியுள்ளது. டேபிள் டென்னிஸ் சிங்கிள்ஸ் பிரிவில் சந்தீப் டாங்கி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், சாஹில் பவார் ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!

பெண்களுக்கான வில்வித்தை இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் ஷீத்தல் தேவி மற்றும் சரீதா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த ஆண்களுக்கான 1500மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா 4:27:70 வினாடிகளில் கடந்து தங்கம் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த 5000 மீ T11 தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 1500 மீ T11 இறுதிப் போட்டியில் ரக்‌ஷிதா ராஜூ தங்கமும், லலிதா கில்லாகா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலமாக இருவரும் இந்தியாவிற்கு 57 மற்றும் 58ஆவது பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

 

மற்றொரு போட்டியில் ஈட்டி எறிதலில் F46 பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட சுந்தர் சிங் குர்ஜார், ரிங்கு ஹூடா, அஜீத் சிங் யாதவ் ஆகியோர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி 54, 55 மற்றும் 56 ஆவது பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதில், சுந்தர் சிங் குர்ஜார் 68.60 மீ தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 61 கிலோ எடைப் பிரிவில் ஜைனப் கத்தூன் 85 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு பெண் வீராங்கனை ராஜ்குமாரியும் 85 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.

 

 

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios