CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணி அதிகளவில் உண்டாகும் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் தரம்சாலாவில் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 5ஆவம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதுவரையில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆனால், ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியிருக்கிறது.
கடைசியாக தரம்சாலாவில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி 22ஆம் தேதி நடந்தது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
SA vs BAN: ஜெயிக்கமாட்டோம் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி சதம் விளாசி சாதனை படைத்த மஹ்மதுல்லா!
மேலும், ஆசிய கோப்பை 2023, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அடுத்ததாக உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறது. இப்படி தொடர்ந்து விளையாடி வரும் அணியின் சீனியர் வீரர்களுக்கு நாளை வரையில் ஓய்வு அளிக்கப்பட்டதாக பிசிசிஐ கூறியதாக தகவல் வெளியானது. மேலும், அவர்கள் குடும்பத்துடன் தங்களது ஓய்வு நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதில், எஞ்சிய வீரர்கள் தரம்சாலாவில் சுற்றுலா சென்றுள்ளானர். சுற்றுலா காட்சிகள் நிறைந்து காணப்படும் தரம்சாலாவில் திரியுண்டு பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் அடங்கிய குழு இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்தியா உடனான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு நியூசிலாந்து வீரர்கள் தரம்சாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமா வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளனர்.