Asianet News TamilAsianet News Tamil

SA vs BAN: ஜெயிக்கமாட்டோம் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி சதம் விளாசி சாதனை படைத்த மஹ்மதுல்லா!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை 23ஆவது லீக் போட்டியில் வங்கதே அணியானது 149 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

South Africa beat Bangladesh by 149 runs in 23rd world cup at Wankhede Stadium, Mumbai rsk
Author
First Published Oct 24, 2023, 11:10 PM IST

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 23ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் 174 ரன்கள், ஹென்ரிச் கிளாசென் 90 ரன்கள், எய்டன் மார்க்ரம் 60 ரன்கள் எடுக்கவே 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்தது.

150ஆவது ஒரு நாள் போட்டி - 174 ரன்கள் அடித்து குயீண்டன் டி காக் சாதனை : முறியடிக்காமல் இருக்கும் தோனி சாதனை!

பின்னர் கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தன்ஷித் ஹசன் 12, நஜ்முல் ஹூசன் ஷாண்டோ 0, ஷாகிப் அல் ஹசன் 1, முஷ்பிகுர் ரஹீம் 8, லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்து வரிசையாக சொற்ப ரன்களில் வெளியேறினர். அப்போது வங்கதேச அணியானது, 14.6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.

அடுத்து வந்த மெஹிடி ஹசன் 11, நசும் அகமது 19 மற்றும் ஹசன் மஹமத் 15 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது வங்கதேச அணியானது, 36.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு 9 ஓவர்கள் தென் ஆப்பிரிக்கா அணியின் பவுலர்களை துவம்சம் செய்தவர் மஹ்மதுல்லா. கடைசி வரை விளையாடிய மஹ்மதுல்லா 111 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Hangzhou 4th Asian Para Games, Powelifting: பளூதூக்குதல் 65 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற அசோக்!

இதன் மூலமாக 6ஆவது மற்றும் அதற்கும் கீழா களமிறங்கி சதம் விளாசியவர்களின் பட்டியலில் மஹ்மதுல்லா இடம் பெற்றார். இதில் கார்லஸ் பிராத்வையிட் 101 ரன்களும், ஜோஸ் பட்லர் 103 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த சாதனையை மஹ்மதுல்லா 111 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார். மேலும், 4 அல்லது அதற்கும் கீழாக களமிறங்கி அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் மஹ்மதுல்லா 3 முறை சதம் அடித்து 3ஆவது இடம் பிடித்துள்ளார். வங்கதேச அணிக்காக உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்களில் மஹ்மதுல்லா 3 சதங்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

இறுதியாக முஷ்தபிஜூர் ரஹ்மான் 11 ரன்களில் வெளியேறவே வங்கதேச அணி 46.4 ஓவர்களில் 233 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும், விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

SA vs BAN:சரவெடியாக வெடித்த குயீண்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென் – தென் ஆப்பிரிக்கா 382 ரன்கள் குவித்து சாதனை!

இன்னும் வங்கதேச அணிக்கு 4 போட்டிகள் உள்ள நிலையில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட வங்கதேச அணியின் அரையிறுதிக்கு வாய்ப்பு இல்லை. ஏற்கனவே இந்தியா 10 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 அணிகளும் 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios