கணுக்கால் பகுதியில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியாபிற்கு இன்னும் காயம் குணமடையாத நிலையில் அவர் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா கணுக்கால் பகுதியில் காயம் ஏற்படவே எஞ்சிய இன்னிங்ஸிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக நியூசிலாந்திற்கு எதிராக தரம்சாலாவில் நடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றார். ஆனால், அவர் 2 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மேலும், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற்று 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!
மேலும் லக்னோவில் நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இடது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாத நிலையில், 29ஆம் தேதி லக்னோவில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியிலும், நவம்பர் 2 ஆம் தேதி மும்பையில் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியிலு இடம் பெற மாட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றது. மேலும், நவம்பர் 5 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
இதுவரையில் விளையாடிய 5 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும், இன்னும் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாட இருக்கிறது. இதில், ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
SA vs BAN: ஜெயிக்கமாட்டோம் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி சதம் விளாசி சாதனை படைத்த மஹ்மதுல்லா!
தற்போது வரையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
